சென்னை : முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரையின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு பாடலாசியிர் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ்தள பக்கத்தில் உருக்கமாக கவிரை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாதுரையின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அதே போல் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவரும் அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அண்ணா குறித்த தங்களின் கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ்தள பக்கத்தில் அண்ணா குறித்து நீண்ட கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விபரம் இதோ...

வான்நீலம் உள்ளவரை
கடல் இருக்கிறது
என்று பொருள்
மாற்றங்கள் உள்ளவரை
பசி இருக்கிறது
என்று பொருள்
தமிழ்நாடு
என்ற சொல்லுக்குள்
உயிராடல் உள்ளவரை
நீ உயிரோடு
இருக்கிறாய் அண்ணா!
இருமொழிக் கொள்கையென்ற
எரிதழல் உள்ளவரை
உன் அக்கினி
அணையாது அண்ணா!
அடித்தட்டுக் கடைமனிதன்
அதிகாரம் பெறும்வரை
உன் உயிர்
உலாவிக்கொண்டிருக்கும்
அண்ணா!
பகைவர்கள்
அடிக்கடி தரும் நெருக்கடி
உன் தேவை இன்னும்
தீரவில்லை என்கிறது
தீர்க்கமாக
உன்னை அறியாமல்
உன் பெயரை மட்டுமே
அறிந்த தலைமுறை
உன் கொள்கையென்னும்
குன்றேறி நின்றால்
அடுத்த நூற்றாண்டிலும்
நீயே ஆள்வாய் அண்ணா!
யுகச் சவாரியில்
காலத்தின் கடைக்கோடிவரை
நீள்வாய் அண்ணா!
பள்ளி மாணவனாய் அழுத
கண்ணீரின் மிச்சம்
இப்போதும் கசிகிறது
கண்ணின் கடைவிழியில்
புகழ் வணக்கம்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது கட்டாயம்.. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்.. கை, கால்களை சுத்தமாக கழுவ செவிலியர்கள் அறிவுரை!
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
{{comments.comment}}