பாக்.கை ஐசிசியால் தண்டிக்க முடியாது.. சொல்கிறார் மணி.. ஆனால் தடைக்கு வாய்ப்பிருக்கு!

Feb 03, 2026,05:04 PM IST

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கூடத்தான் பாகிஸ்தானுக்கு விளையாட வர மறுத்து வருகிறது. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவரும், முன்னாள் ஐசிசி தலைவருமான எஹ்சான் மணி தெரிவித்துள்ளார்.


ஆனால் மணி சொல்வது போல இந்தியா முழுமையாக பாகிஸ்தானைப் புறக்கணிக்கவில்லை என்பதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது ஐசிசி கடுமையான நடவடிக்கைளை எடுக்க வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.


வங்கதேச கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக கருதி தனக்குத் தானே ஆப்பு வைத்து வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. வங்கதேச கிரிக்கெட் வீரர் ஒருவர், ஐபிஎல்லிலிருந்து நீக்கப்பட்டதால், வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து டி20 போட்டிகளில் பங்கேற்க மறுத்தது. இதையடுத்து அந்த அணி போட்டித் தொடரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது.




இந்த நிலையில் வங்கதேசத்திற்கு ஆதரவாக, இந்தியாவுடனான போட்டிகளில் விளையாடுவதை தவிர்க்கப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவித்துள்ளது. அதாவது பாகிஸ்தான் அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாகிஸ்தான் கூறுகிறது. இப்படிக் கூறினால், ஐசிசியின் தடை உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளிலிருந்து தப்பலாம் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எண்ணம்.


இதை முன்னாள் ஐசிசி தலைவரான எஹ்சான் மணியும் எதிரொலித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 

அரசாங்கத்தின் உத்தரவைப் பின்பற்றும் பட்சத்தில் பாகிஸ்தான் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்க முடியாது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்தியா பாகிஸ்தானுக்கு வர மறுத்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு ஒரு நீதி, பாகிஸ்தானுக்கு ஒரு நீதி என இரட்டை நிலையை ஐசிசி கடைபிடிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


ஆனால் மணி கூறியுள்ளது போல இந்தியா முழுமையாக பாகிஸ்தானை புறக்கணிக்கவில்லை என்பது இங்கு முக்கியமானது. 2025 சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்தியா பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய மறுத்தாலும், பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளில் விளையாடியது. பாகிஸ்தானுடன் அந்த இடத்தில் நடந்த போட்டியில் கலந்து கொண்டது. ஆனால் தற்போது பாகிஸ்தான், பொதுவான இடமான இலங்கையில் இந்தியாவுடன் விளையாடவே மறுக்கிறது. இது ஐசிசி விதிமுறைகளின்படி பாகிஸ்தானுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும்.


பொது இடத்தில் கூட விளையாட மறுப்பதை ஐசிசி விதிமுறைகள் ஏற்காது என்றும் கூறப்படுகிறது. எனவே எப்படிப் பார்த்தாலும், இந்தியாவுடன் விளையாடுவதை பாகிஸ்தான் புறக்கணித்தால் அந்த நாட்டுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றே சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

news

"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

news

கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!

news

ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை

news

கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை

news

வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!

news

வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!

news

கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!

news

தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்