சென்னை: விசில் எதுக்கு அடிப்பாங்க? ஆபத்துல இருக்கும்போது அடிப்பாங்க help..helpனு டைட்டானிக் படம் க்ளைமாக்ஸ்ல பாத்திருக்கீங்களா? விஜய் கட்சி ஆபத்துல இருக்கு. அதனால விசில் அடிக்கிறாங்க என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கரூரில் 41 பேர் பலியான குற்ற உணர்வு இல்லாமல் டான்ஸ் ஆடுகிறார் விஜய். தலைவராக இருப்பதற்கான அருகதை விஜய்க்கு இல்லை. தவெக தலைவர் விஜய் திரைப்படங்களில் நடிக்க வாங்கிய சம்பளத்தில் வெள்ளை குறைவு, கருப்பு அதிகம். யார் யாரை விமர்சிக்க வேண்டும் என்ற விவஸ்தை இல்லாதவர் விஜய். ஆதவ் அர்ஜுனாவின் லாட்டரி பணத்தில் தான் தவெக கட்சியே நடக்கிறது. போட்டி திமுக அதிமுக இடையேதான்.

நடுவில் வந்து திமுகவுக்கு தவெகவுக்கும்தான் போட்டி என விஜய் கூறுவது நானும் ரவுடிதான் என்பதை போல் உள்ளது. அவரை யாரும் கண்டுக் கொள்ள மாட்டார்கள். இப்போ பாஸ்புட் மாதிரி ஒருத்தர் கட்சி ஆரம்பிச்சு இருக்காரு பாருங்க. யாரு? விஜய். அவருக்கு என்ன சின்னம் கொடுத்து இருக்காங்க. பொதுவாவே விசில் யார் அடிப்பாங்க. ஆபத்துல இருக்கிறவங்க தான் விசில் அடிப்பாங்க. தவெகவினர் ஆபத்தில் இருப்பதை உணர்த்தி விசில் அடிக்கிறார்கள். டைட்டானிக் படம் பார்த்தீங்களா, அதில் கிளைமாக்ஸில் விசில் அடிப்பார்கள், எதற்கு அவர்கள் ஆபத்தில் உள்ளதை குறிப்பிடுவார்கள்.
திமுக, திமுக இடையில் மட்டும்தான் போட்டி. வெற்றிவாகை சூடியவர் நம்ம புரட்சி தலைவர் எம்ஜிஆர். அவர் 1953ல இருந்து மக்களுக்கு உதவி செஞ்சாரு. விளம்பரம் இல்லாமல் உதவி செய்தவர் நம்ம தலைவர். இப்போ தேர்தலை மனசுல வைச்சுட்டு உதவி செஞ்சால் என்ன அர்த்தம், அதுல உள்நோக்கம் இருக்கு. இதனிடையில் நேற்றைய தினம் நடைபெற்ற தவெக மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பாஜக தலைமையில் மற்றும் பலர் என அதிமுக பெயரை உச்சரிக்காமல் விமர்சித்திருந்தார். அவருடைய இந்த பேச்சு அதிமுகவினர் இடையில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது அதிமுகவை தொட்டால் விஜய் கெட்டார் என்று தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!
பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்
“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!
"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!
பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்
பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!
{{comments.comment}}