சென்னை: விசில் சத்தத்தில் தீய சக்தியும், ஊழல் சக்தியும் தெறித்து ஓடும். ஜார்ஜ் கோட்டையில் தவெக ஆளும் கட்சியாக இருக்கும் என்று தவெக 3வது ஆண்டு தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
தவெகவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், மக்களின் கண்ணீரை துடைக்க தான் தவெக துவங்கப்பட்டது. தொண்டர்கள் தான் நம் மிகப்பெரிய பலம். தொண்டர்களை நம்பி தான் நானும், கட்சியும் உள்ளோம். எம்.ஜி.ஆர்., 1977ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரேடியோவில் பேட்டி கொடுத்தார்.
அதில் அவர் பேசும் போது, ‘பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் இருக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது என்பதை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன்’ எனத் தெரிவித்தார். அன்றைக்கு அந்த கண்ணீரைத் துடைக்க ஆரம்பித்த இயக்கம் தான் அதிமுக’ என்று சொன்னார். அதே மாதிரி 2017, 2021க்கு அப்புறம் தமிழ்நாட்டின் நிலைமையை பற்றி யோசிச்சு பார்த்த நம்ம மக்கள், காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா அவர்கள் இருந்த இடத்தில், எம்ஜிஆர் அவர்கள் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை வந்துவிட்டதே என்று கண்ணீர் வடித்தார்கள். அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழக வெற்றிக் கழகம்.

நான் சினிமாவை விட்டாலும், என்னை விமர்சிப்பவர்கள் விடுவதில்லை. திருவள்ளுவர் இன்று இருந்திருந்தால் திமுக என்ற தீயசக்தி குறித்து திருக்குறள் எழுதியிருப்பார். அநீதி, அராஜகம், தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு என எழுதியிருப்பார். எம்ஜிஆருக்கு இருந்த அனுபவம் விஜய்க்கு உள்ளதா என கேள்வி எழுப்புகிறார்கள். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது கேட்ட அதே கேள்வியை தான் இப்போதும் கேட்கிறார்கள். 1977 போன்றே துருப்பிடித்த வியூகத்தை கையில் எடுக்கிறார்கள். டெக்னிக்கை மாற்றுங்க பாஸ். தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியாக தவெக வளர்ந்துள்ளது. இதற்கு காரணம் தவெகவை நேசிக்கக்கூடிய கோடிக்கணக்கான மக்கள் தான்.
மாபெரும் மக்கள் சக்தியாக நமது அணி ஒருபக்கம். அடுத்து திமுக தலைமையில் மற்ற கூட்டணி கட்சிகள் ஒருபக்கம். அடுத்து பாஜக தலைமையில் மற்றும் பலர். இப்படி எத்தனை சக்திகள். எத்தனை கட்சிகள் வந்தாலும் திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியாக நம்மால் தான் முடியும். விசில் சின்னம் இலுஅலுதுஆ ஊரே இல்லை. விசில் உள்ள இடங்களில் எல்லாம் தவெக உள்ளது. தவெகவினர் வாக்கை யாராலும் வாங்க முடியாது.
எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது. நிருபர்களைச் சந்திப்பது கிடையாது, டெல்லியை பகைத்துக் கொள்ள மாட்டார் என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். இது போல் தான் எம்ஜிஆர்யும், அவரது தொண்டர்களையும் விமர்சித்தனர். இதை எல்லாம் அமைதியாக பார்த்த மக்கள் என்ன செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதே ஆயுதத்தை தான் என் மேலும் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை...வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
தமிழக அரசின் மாநிலக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் பெயர்கள்
ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு வழக்கு: முன்னாள் தேர்வாணையத் தலைவர் கிடாங்ணதே கைது
தமிழ்த்தாய் வாழ்த்தை கடைசியில் பாட வற்புறுத்தவில்லை - கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
சூப்பர் ஆண்டி.. பொறணி பேசியே 2 வீடு வாங்கி செட்டிலான கொலம்பியா மிரியம்!
நோட்டிஃபிகேஷன் மனிதர்கள் – போன் வைப்ரேட் ஆனா மட்டும் போதாது மச்சா!
சட்டசபையில் கலகல.. முதல்வர் விஜய்யை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!
மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து என்று மத்திய அரசு சொல்லவே இல்லை.. டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்
Monday Motivation: இயற்கையைக் கொ(வெ)ல்லும் செயற்கை.. நல்லதல்ல விரைந்து விழிப்படைவோம்!
{{comments.comment}}