- ஜோசப் சாம்ராஜ்
கோடைக்கால இடிசப்தம் தூரத்தில் முழங்கியது. இயேசப்பா நான் வீடு போகும் வரை மழை வந்து விடக்கூடாது என்று மனதில் வேண்டிக்கொண்டே வேகமாக நடந்தான் ஜோ. அவன் பின்னால் அவனது செல்லப்பிராணி பப்பி அங்கும் இங்கும் செடியை முகர்ந்து பார்த்து கொண்டு தலைவரை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டு அசால்ட்டாக குதித்து வந்தது.
செடியின் ஓரத்தில் அழகிய பனித்துளிகள் துளிர்த்தது. ஊர்ந்து செல்லும் ரயில் பூச்சிகளும் விரைவாக செடிகளுக்குள்ளே நகர்ந்து கொண்டே இருந்தது. ரோடு ரொம்ப மோசமாகி விட்டது. சே குண்டுங் குழியுமாக என்று புலம்பிக் கொண்டே ரேசன் கடையில் கால்கடுக்க நின்று வாங்கி கொண்டு வந்த மண்ணெண்ணெய் கேனை ஒரு கையால் தூக்கி கொண்டு மழை மேகத்தை விட விரைவாக வீட்டுக்கு வந்தான்.
பொன்னையா தாத்தா ஈஸி சேரில் உட்கார்ந்து கடவுள் தந்த மேடை பாடலை வானொலியில் ரசித்து கேட்டு கொண்டு இருந்தார். அம்மா சூடான காபியும் சீடை உருண்டையும் கொடுத்ததும் தலையை லேசாக துவட்டி விட்டு பப்பிக்கு ஒரு உருண்டை போட்டு விட்டு அப்பாவின் அறையை நோக்கி ஓடினேன். அப்பா அடுத்த நாள் ஆலயத்தில் பேசுவதற்காக தயார் பண்ணி கொண்டு இருந்தார்.

அப்பா என்று குரல் கொடுத்தேன். என்ன தம்பி என்று வினவினார். எனை செல்லமாக தம்பி என்று தான் அழைப்பார்கள். அப்பா சாலை மோசமாக உள்ளது. அதற்கு ஒரு பெட்டிசன் அனுப்பி சாலையை சரி பண்ண வேண்டும் என்று கூறினேன். அப்பா எப்போதும் பொது வேலையை இழுத்து போட்டு ஆனந்தமாக செய்வார். குழாயில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட தனது காசை போட்டு செலவழித்து பார்ப்பார். அது தான் ஆனந்தம் என்று கற்றுக் கொடுத்தார்.
அப்பாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். அநேக மாணவர்கள் அப்பா உதவியால் படிக்க வைப்பதாக சொல்வாங்க. எழுதி முடித்து டைரியில் வைத்து இருந்ததை ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டியில் போட்டு வரச்சொன்னார். மேலே ஓடிக்கொண்டு இருந்த ஓரியண்ட் காற்றாடி அசைந்து அசைந்து தலை ஆட்டியது. தூரத்தில் ஜெய் விலாஸ் பேருந்து ஹாரன் சப்தம் கேட்டது.
தாத்தா காலை ஆட்டிக்கொண்டு எதையோ லொட்டு லொட்டு என்று அடித்து கொண்டு இருந்தார். அம்மா குசினியில் அதாவது சமயலறையில் இது கொழும்பு பாசை. அம்மா பிறந்து வளர்ந்து எல்லாம் கொழும்பு என்று சொல்வார்கள். நான் பெரியவன் ஆன பிறகு கப்பலில் அங்கு சென்று யாழ்ப்பாணம் நூலகம் அம்மா பிறந்தவீடு எல்லாம் பார்க்க வேண்டும்.
குடையை எடுத்து கொண்டு நடந்து போய் சிவப்பு பெட்டியில் போட்டு விட்டு வந்தேன். சந்திரன் கடையில் வாழைக்காய் பஜ்ஜி வாசம் மூக்கை துளைத்தது. நிறைய கூட்டம் தேனீர் கடையில். பெண்கள் ஏன் தேனீர் கடை பக்கம் வருவதில்லை என்று யோசித்து கொண்டே வந்தேன்.
சாலை எங்கும் ஆங்காங்கே குப்பைகள். நம் ஊர் ஜனங்கள் மாறவேண்டும் என்று நினைத்து கொண்டு நாகூர் ஹனிபா கடையில் ஒரு பேனா ஒன்று வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வாரங்கள் பல கடந்து ஓடியது. பெரிய சக்கரம் கொண்ட வண்டி நத்தை போல மெதுவாக நகர்ந்து கொண்டே சென்றது. பின்னால் தார் வண்டி. சந்தோஷமாக இருந்தது. அப்பா கடிதம் வேலை செய்து விட்டது. இனி நிம்மதியாக குழந்தைகள் பெரியவர்கள் நடந்து செல்ல முடியும்.
நானும் பெரியவன் ஆன பிறகு அப்பா போல பொதுவேலை செய்ய வேண்டும். நாலு பேருக்கு நான் உதவியாக வாழவேண்டும். ஆலயமணி சப்தம் ஆம் என்று சொல்வது போல் காதில் ஒலித்தது.
(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)
சம்பந்தியாகும் நீதிபதி
புது ஜோடி
மூன்றெழுத்து காதல் வந்து முழு மனசும் மாறுதே
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
Dilani Sridharan Poem: பேரழகு!
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!
வேர் இன்றி விருட்சம் தான் உண்டோ?
{{comments.comment}}