சென்னை: என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நான் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்று முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்கள் சந்தி்ப்பில் பேசுகையில், என் தந்தையின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது. இதன் காரணமாக சிங்காநல்லூர், விருகம்பாக்கம், காரைக்குடி உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்தும் விலகுகிறேன்.

யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு மத்திய பட்ஜெட் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. குறு சிறு நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உட்கட்டமைப்பு,பெண்கள் விடுதி, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவுடன் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் 18 சதவீதம் என முடிவுக்கு வந்துள்ளது. எல்லா மாநிலத்திற்கும் பயனளிக்கும் வகையில் நல்ல பட்ஜெட் கொடுத்துள்ளோம்.
எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் முதலமைச்சர் வேட்பாளர். விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை. விஜய்யிடம் வண்டி, பெட்ரோல் டீசல், வண்டியை இயக்க யாரிடமும் இல்லை. 234 தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விரைவில் இந்த சூழ்நிலை விரைவில் மாறும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி களம் காண்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்.. கோதை வாழும் ஊர்.. சீரான ஸ்ரீவில்லிபுத்தூர்!
சிறு பிள்ளைகள் இன்று சிறுபிள்ளைகளாக இல்லை!
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
{{comments.comment}}