அம்மா பாடிய தாலாட்டு
Oct 01, 2026,10:56 AM IST
- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
அம்மா பாடிய தாலாட்டு
அஞ்சு வயசுலே நா கேட்டேன்
நெஞ்சில் பதிந்தது ஆழமாக
கொஞ்சி மகிழ்ந்தது நீளமாக
நிலவு காட்டி
சோறு ஊட்டி
நிம்மதியாக தூங்க வைக்கும்
அம்மா எனும்
என் சாமி
உனக்கு மிஞ்சிய
ஏது சாமி
எத்தனை நாட்கள்
பத்தியம் இருந்தாய்
எம்மை வளர்க்க
தூக்கம் துறந்தாய்
கண் போல் வளர்த்த
உத்தமியே
கருணை மிகுந்த பத்தினியே
நெத்தியில் கன்னத்தில்
பொட்டு வச்சு
பவுடரில் மேனிக்கு
பட்டு வச்சு
உணவுடன் பாசமாய்
தாய் மொழியை
ஊட்டி வளர்த்திட்ட
உயிர் மூச்சு
பெயரோடு புகழோடு
புள்ளை வளர்ந்தா
யாரோட புள்ளை என்று
ஊர் கேட்கும்
அம்மா பேர் சொல்லும்
புள்ளை என்றால்
அகிலம் எங்கும் அம்மாவின்
புகழ் மணக்கும்
வாழ்க வாழ்க அம்மா
வள்ளுவன் குறல்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)