- கவிஞர் பி.எஸ். முருகேசன்
சென்னையிலே மாடு ரெண்டு
தெருவெல்லாம் சுத்துது
பண்ணையிலே ஆடு ரெண்டு
பகலெல்லாம் கத்துது
கோட்டானைக் காகம்
வந்து கூட்டமாகக் கொத்துது
பழுத்ததொரு கோவைப் பழம்
பசுங்கிளிக்குப் பத்துது
பாய்ந்து வரும் காளைமாடு
வீரனையும் குத்துது
பாசம் காட்டும்
மாந்தரிடமே
மழலையும் தான் நத்துது.

வானத்திலே மழை பொழிஞ்சா
ஆறு குளம் நெரம்புது
ஆகாய நீர் வீழ்ச்சி
அந்தரத்தில் கொட்டுது
அழகு தமிழ் ராகத்திலே
ஆனந்தமாய் மெட்டு எடு
அன்பாக மாமன் நெஞ்சம்
அடியே நீ தொட்டுவிடு
புதுசாக பூத்த மலரே
புன்னகையைத் தவழவிடு
புது வண்டு தேன் எடுக்க
பாவை இடம் தந்துவிடு
தேவை என்று மனம்
விரும்பி
தேடி வந்த தேவதையே
கூடிப் பேச மகிழ்ச்சி தானே
விரும்புகிறேன் நான் அதையே
ராமன் கண்ட
சீதை போல
நானும் கண்டேன்
ராதை உன்னை
ராப் பகலா
கண் விழிச்சு
காத்திருப்பேன் வாடி முன்னே
சேத்து வச்ச
கண்ணே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
அழகு தமிழ் ராகத்திலே ஆனந்தமாய் மெட்டு எடு அன்பாக மாமன் நெஞ்சம் அடியே நீ தொட்டுவிடு!
நான் நிரந்தரமானவன்.. திருச்சியில் அரங்கேறிய மரபுப் பா கவியரங்கம்!
கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
நவீன நல்லதங்காள்!
சப்த கன்னியர், சப்த மாதர்கள் இரண்டும் ஒன்றா?
Dorothy Quick Review: திருநங்கைகளை இனி பார்த்தால் வணங்க வேண்டும்..!
நல் வாழ்வியல் சிந்தனைகள்.. பாராட்டினால் மகிழ்ச்சி.. அறிவுரை என்றால் கசக்குது!
Tuesday Thoughts: அவர்களை விடுங்கள்! நிம்மதியாகப் போகட்டும்!
புரட்டாசி மாதம் விரதம் இருப்பதெல்லாம் சரி.. என்னெல்லாம் சாப்பிடலாம்.. இந்தா பிடிங்க லிஸ்ட்!
{{comments.comment}}