காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!
- கவிஞர் பி.எஸ். முருகேசன்
கோதை அவள்
செகப்பு தான்
கூந்தல் ரொம்ப
கருப்பு தான்
காந்த விழிப்
பார்வையிலே
கவர்ச்சி கொஞ்சம்
மிடுக்குத் தான்
பாத்துப் பாத்து
ரசிக்கிறேன்
பரவசத்தில் துடிக்கிறேன்
நவரச நாயகியே
நானும் வந்து அழைக்கிறேன்
ஒதுங்கி ஒதுங்கி
நிக்கிறே
ஓரக்கண்ணால்
தைக்கிறே
மயங்கி நிக்கிற
மாமன் என்ன
பாக்க ஏன்டி
மறுக்கிறே
தேடி வந்து
நிக்கிறேன்
தேவதையா பாக்குறேன்
ஏன்டி நீயும்
வெறுக்குறே
எதிரி போல
நினைக்கிறே
ஒன்னாலே ஏங்குறேன்
உதிரிப்பூவா வாடுறேன்
கண்ணே நீ வாடி
கவிதை ஒன்னு பாடி
இல்லேன்னா மாமன்
வளர்க்கப் போறேன் தாடி
சிங்காரி சிட்டு
சினத்தைக் கொஞ்சம் விட்டு
சீக்கிரமா வாடி
ஏ மனசையும் தான் தொட்டு
காஞ்சிபுரம் பட்டு
வாங்கித் தாரேன் கட்டு
காலம் நேரம் பாக்க வேணாம்
கண்ணே நீதான் லட்டு
ஓடி வாடி
ஓடி வாடி
ஒலக அழகி சிட்டு
பாடுவோம் வானம்பாடி
பறவை போல பாட்டு
பகைவர் கூட பாராட்டு
கூறவேண்டும் கேட்டு
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)