மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

Su.tha Arivalagan
Sep 07, 2026,01:00 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


ஒன்னக் கண்டு 

சொக்குறேன்டி ராக்கு ராக்கு

ஒரு நிமிசம் ஏறுதடி

கிக்குக் கிக்கு


ஓடைப் பக்கம் போறியடி 

மக்கு மக்கு

நான் மட்டும் 

ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு


பக்கத்துத் தோப்புல தான் 

பாக்கு பாக்கு

கொட்டிக் கிடக்குதடி 

ராக்கு ராக்கு


பாத்துப் பொறுக்க வேணும் நேக்கு நேக்கு

போட்டு நிரப்ப வேணும் 

சாக்கு சாக்கு




மென்னாத் தொவக்குமடி 

நாக்கு நாக்கு

மேனி சிலிக்குமடி 

நோக்கு நோக்கு


தாகம் எடுக்குமடி 

ராக்கு ராக்கு

தந்தனானாப் பாட்டு வரும் நேக்கு நேக்கு


மூக்கு செவக்குதடி

ராக்கு ராக்கு

முந்தானை விலகுதடி 

ஜோக்கு ஜோக்கு


வானம் கருக்குதடி

ராக்கு ராக்கு

வாடையும்  வீசுதடி

காத்து காத்து


மாமன் மனசு 

கொஞ்சம் பாத்து பாத்து

மயிலே மனமிரங்கு

ராக்கு ராக்கு


வாழ்க்கை சிறக்குமடி 

ராக்கு ராக்கு

வசந்தம் பொறக்குமடி 

ராக்கு ராக்கு


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)