வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே
- கவிஞர் பிஎஸ் முருகேசன்
கொன்றை மரம் பூத்திருக்கு
குளுகுளுனு நிழல் இருக்கு
கூடி நாம பேசிக்கலாம்
வாடி சின்னப் புள்ளே
ஒன்ன கோபுரம் போல்
வச்சுருக்கேன் மாமன் நெஞ்சுக்குள்ளே
கொன்றை மரம்
நிழலும் வேணாம்
கூடி நாம
பேச வேணாம்
கேடித்தனம் செய்யும்
மச்சான்
சொன்னாக் கேளுங்க
கெட்ட கோபம் எனக்கு வரும்
தள்ளி நில்லுங்க
கட்டான கட்டழகி
கருத்த வண்ண
சிட்டழகி
கோவம் கொள்ள
வேண்டாமடி
கொஞ்சும் ரஞ்சிதமே
ஒன்ன கண் போல்
பாத்துக்கிறேன்
பொண்ணு ரத்தினமே
வாஞ்சையோடு பேசுறீக
வார்த்தை ஜாலம் பண்ணுறீக
நெஞ்சம் இடம்
கொடுக்கலியே நேச மச்சானே
நிலமை ஒன்னும் புரியலியே ஆச மச்சான
மனசேக் குழப்ப வேணாம்
மறுப்பு ஏதும் பேசவேணாம்
பொறுப்பாக பாத்துக்கிறேன்
பொண்ணு ரத்தினமே
நீயும் சம்மதத்தை சொன்னா போதும்
வண்ணச் சித்திரமே
இருமனம் சேர்ந்துக்கிட்டா
ஒசந்து நிக்கும் நேச மச்சானே
வானத்திலே சிறகடிப்போம் வாங்க மச்சானே
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)