வயலு வரப்புல தான் வண்ண மயில் நான் நடக்க!

Su.tha Arivalagan
Jul 31, 2026,02:58 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


வயலு வரப்புல தான் 

வண்ண மயில் நான் நடக்க

புயலும் மழை அடிக்க 

புடவையும் மழை நனைக்க


நானும் குடை பிடிச்சு 

நடக்கிறேன் தான் நனஞ்சு

தரையும் வழுக்குதே

தடுமாற்றம் மாகுதே


மழைநீர் வெள்ளம் வந்து 

வயலையும் தான் மூழ்கடிக்க

மனமும் படபடக்க 

மழைநீரை நா கடக்க




வீடு வந்து 

சேர்வதற்கு 

வெகு சிரமம் ஆயிருச்சு 


தலை துவட்டி 

துணி மாத்தி

தரமான பால் வாங்கி


சூடான காஃபி போட்டு 

சுக்கையும் தட்டிப் போட்டு

மாமனுக்கு தந்து 

மரியாதை செய்யனுமே


சாமிக்கு விளக்கேற்றி 

குங்குமம் பொட்டு வச்சு

குல சாமி கோவிலுக்கு 

கூட்டிக்கிட்டு போகணும்


குடும்பம் நலமாக 

கும்பிட்டு வேண்டனும்

பிள்ளைங்க குட்டியோட 

பெருமையுடன் வாழணும்!