- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
தேசம் விட்டு தேசம் போய்
திரவியம் தேடு
தேவை நெறஞ்சதுனா
திரும்பிடு நாடு
தேவை தேவையென்று
தேடுதல் தொடர்ந்தா
ஓடு ஓடு என்று
காலமும் கடந்தா
செலவு போல தீர்ந்து போகும்
வாழ்க்கையும் தான்
பிள்ளை குட்டி பாசம் எல்லாம் போக்கியம் தான்

அயல் நாட்டில்
ஐக்கியம் ஆனாய்
அப்பாவை அறியாத
பிள்ளைகளுக்கு ஆளானாய்
செல்லில் பேசி
செல்லில் சிரிக்கும்
ஜீ பூம்பா வேலை
எத்தனை நாளைக்கு
வீதியிலே விளையாடும்
விருப்பம் கனவு
அப்பாவின் மடியில்
அமர்வதும் கனவு
குடும்பம் கூடி
மகிழ்வதும் கனவு
பள்ளியில் விட
பயணிக்கும் கனவு
இத்தனை கனவு
எத்தனை ஏக்கம்
ஏங்கும் மனசிலே
இருக்காதா தாக்கம்
எத்தனை நாட்கள்
பறந்தன தூக்கம்
மறக்க நினைத்தால்
மனது வலிக்கும்
கன்றைத் தேடும்
தாய்ப் பசு
நாங்கள் பசுவைத்
தேடும் கன்றாக
வாருங்கள் இணைவோம்
நாம் ஒன்றாக
வாழ்வோம் இணைந்து
நன்றாக
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
{{comments.comment}}