தலை சீவி பொட்டு வச்சு தாலிக்கு மஞ்சள தொட்டு வச்சு!
- கவிஞர் பி.எஸ். முருகேசன்
தலை சீவி
பொட்டு வச்சு
தாலிக்கு மஞ்சள
தொட்டு வச்சு
கொல்லைப்புற போகும் போது குப்பம்மா குப்பம்மா
ஓ கொழுந்தனுக்கு
வேலையென்ன தப்பம்மா
தப்பம்மா
பொழப்புக்கு வேலை தேடி
போயிருக்கான் ஓ புருசன்
பொசுக்குனு வந்துட்டானா குப்பம்மா குப்பம்மா
ஓ பொழப்பு ரொம்ப
நாறிப் போகும்
தப்பம்மா தப்பம்மா
கொல்லையிலே வெத்தலைய
கொழுந்தனாரு கிள்ள வந்தான்
தப்பாக நெனச்சுக்
கிட்டு சிட்டம்மா சிட்டம்மா
நீங்க தடதடன்னு வந்துட்டீக சிட்டம்மா சிட்டம்மா
நல்லவேளை தெரிஞ்சுக்கிட்டேன்
நானும் கொஞ்சம்
புருஞ்சுக்கிட்டேன்
கோபம்கொள்ள வேட்டாமடி
குப்பம்மா குப்பம்மா
நா கோவிலுக்கு போயிவாரேன் குப்பம்மா குப்பம்மா
தப்பான சிந்தனையை
மனசுலே தான் வச்சுக்கிட்டு
எப்போதும் பேசாதீங்க
சிட்டம்மா சிட்டம்மா
ஏடாகூடமாகிப் போகும்
சிட்டம்மா சிட்டம்மா
பொழப்பு அத்த வேலையெல்லாம்
பொம்பளக்கி ஆகாதுங்க
பாத்து நடந்துக்கணும் சிட்டம்மா சிட்டம்மா
பொல்லாத சிறுக்கிநானு
சிட்டம்மா சிட்டம்மா
வெத்தலய கிள்ளிக்கொடு
வெவரம் கொஞ்சம் சொல்லிக்கொடு
குப்பம்மா குப்பம்மா
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)