Folk Song: குடகு மலை தென்றலோடு வா நிலா!
Oct 09, 2026,01:42 PM IST
- கவிஞர் பி.எஸ்.முருகேசன்
கொங்கு நாட்டில் பிறந்தவளே கோகிலா
குடகு மலை தென்றலோடு வா நிலா
வைகையிலே மலர்ந்து சிரிக்கும் பூ நிலா
வாஞ்சையோடு முத்தம் ஒன்னு தா நிலா
கார் முகில் வானத்திலேவரும் உலா
பார்வையிட மறுத்து விடும் வெண்ணிலா
போர்வைக்குள் ஒளிந்து கொள்ளும் பெண் நிலா
போதையிலே மயங்கிடாதே காதல் வாணிலா
பார்வை பட்டால்
போதுமடி கோகிலா
பாச மழை
தூவுமடி எண்ணிலா
விண்ணிலும் மண்ணிலும்
வந்தனம் தந்திடும்
தந்தனம் பாடிடும்
வாழ்க்கையின் திருவிழா
வசந்தத்தின் ஒளி விழா
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)