தென்னை போல நெடு நெடுன்னு வளர்ந்திருக்கும் தேவதையே!

Oct 06, 2026,12:19 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன், திண்டுக்கல்


நதியைப் போல சலசலக்கும் 

நாயகியின் கொலுசு 


கை இரண்டில் 

மினு மினுக்கும் 

வளையல் ஒரு தினுசு 


தென்னை போல 

நெடு நெடுன்னு 

வளர்ந்திருக்கும் 

தேவதையே 




மல்லிகையாய் 

மணமணக்க 

தேடி வந்தேன் நான் ஒன்னயே 


கொல்லையிலே குளு

குளுன்னு குளுமை தேடும் 

நித்திரையே 


அக்கினியில் நிழலைத் 

தேடி தேடி 

அலைய விடும் சித்திரையே 


சொக்கத் தங்கம் 

என்று என்று 

சூளுரைக்கும் முத்திரையே 


பக்கத்திலே வந்து வந்து 

பாசமாக பேசலயே 

வெக்கம் என்று 

சொல்ல சொல்ல 

வெவரம் இன்னும் பத்தலையே


அத்தை மக ராணி ஒன்ன

அள்ளி அள்ளி கொஞ்சலயே 


பாவை ஒன்ன பாத்து பாத்து 

பலன்கள் ஒன்னும் 

சேரலையே 


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்