ஒரு குட்டிக் கதை.. வெள்ளி கொலுசு மணி!

Oct 06, 2026,12:12 PM IST

- ஜோசப் சாம்ராஜ்


பாடல், வாடகை வேனில் செல்லும் போது சில் சில் என்று ஒலிக்கும். அதே நேரத்தில் ஒரு பெண் குழந்தையின் காலில் இருந்து கொலுசு வேனிற்குள் கீழே விழுந்தது. விழுந்தது அந்த குழந்தைக்கு தெரியவில்லை. கல்யாண கோஷ்டி தங்கள் இடம் வந்ததும் தங்கள் இல்லம் நோக்கி கிளம்பி விட்டனர். கீழே விழுந்த கொலுசு யாருக்கும் தெரியாமல் கீழே கிடந்தது. 


அடுத்த நாள் வேறு நபர்கள் அந்த வேனை புக் பண்ணினார்கள். அவர்கள் கண்ணிற்கு கொலுசு தெரியவில்லை. அவர்களும் மறுநாள் முழுவதும் சுற்றி விட்டு வீடு சென்று விட்டார்கள். 


மறுநாள் வேனை சுத்தம் செய்யும் போது ரவி கண்களில் பட்டது கொலுசு. யோசித்து பார்த்தார். இரண்டு திருமண கோஷ்டிகள் வெவ்வேறு நாட்களில் பயணம் செய்தனர். யாரென்று தெரியவில்லை. செல்பேசி எடுத்தார் கால் பண்ணி விஷயத்தை சொன்னார். கொஞ்சம் விவரமாக. இதில் என்ன விசேஷம் என்னவென்றால் இரண்டு கோஷ்டிகளும் கொலுசு என்னுடையது என்று சொல்லி விட்டார்கள். 




கதை படிக்கும் நண்பர்களே உண்மையில் கொலுசு யாருக்கு சொந்தம் என்று எப்படி கண்டுபிடிப்பீங்க...!


ரவி ஓட்டுனர் புத்திசாலிதனமாக முடிவு செய்தார். தொலையாத மறுகொலுசை காட்டிவிட்டு வாங்கிட்டு போக கூறினார். மறுநாள் இருகோஷ்டிகளும் வந்திருந்தனர்.


கொலுசை காட்டியவர் பெற்றுக் கொண்டார். அடுத்த கோஷ்டி நபர் ஏன் வந்தார். அடுத்தவர் பொருள் மேல் ஆசைப்படலாமா. இது நியாயமா. ஓட்டுநர் நேர்மையான செயலால் உரியவருக்கு அந்தக் கொலுசு கிடைத்தது. 


மீண்டும் கொலுசுகள் இரண்டும் பேசிகொண்டன. மனிதர்கள் இப்படி தான் என்று கொலுசைப் பெற்றுக் கொண்ட  குழந்தை ஓடியது. கொலுசு சப்தம் இனிமையாக காதில் விழுந்தது.


(கட்டுரையாளர் த. ஜோசப் சாம்ராஜ், ஆசிரியர். குருவி குளம் சரகம், தென்காசி மாவட்டம். 33வருடங்கள் ஆசிரியர் பணி. சாலமன் பாப்பையா கற்றுக் கொடுத்த மேடைபேச்சுக் கலை மற்றும் நகைச்சுவை பேச்சைத் தொடர்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்