புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவிற்கு அனுமதி கிடையாது: புதுச்சேரி சபாநாயகர் செல்வம்

Meenakshi
Dec 02, 2025,02:51 PM IST
புதுச்சேரி: விஜய்யின் ரேட் ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், பெரிய இழப்பு கரூரில் நிகழ்ந்துள்ளது என்று புதுச்சேரி சபாநயகர் செல்வம் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் புதுவையில் ரோடு ஷோ நடத்த அனுமதி கேட்டுள்ள நிலையில், இது தொடர்பாக புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், 




விஜய்யின் ரேட் ஷோவிற்கு அனுமதி அளிப்பது சரியானதாக இருக்காது. ஏனென்றால், பெரிய இழப்பு கரூரில் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வழக்குகள் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், புதுவையில் ரோடு ஷோ நடத்த தவெகவினர் அனுமதி கேட்டு வருகின்றனர். தமிழகம் போல புதுவையில் பிரம்மாண்டமான தேசிய நெடுஞ்சாலைகள் இல்லை. குறுகிய சிறிய சாலைகள் தான் உள்ளது. 

அதுமட்டுமில்லாமல் அவர்கள் அனுதி கேட்ட சாலை என்பது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம். அதோடு போக்குவரத்து நெரிசலும், நெருக்கடியும் அதிகம். இதனால் புதுவையில் ரோடு ஷோ நடத்துவதை விஜய் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக குறிப்பிட்ட இடத்தை நிர்ணயித்து அங்கு பொதுக்கூட்டம் நடத்தலாம். அதற்கு அரசு அனுமதி வழங்கும் என்று தெரிவித்துள்ளார்.