இதுக்கு ஒரு எண்டே இல்லையா?.. விஜய்யைத் தேடித் தேடி வரும் இடியாப்ப சிக்கல்கள்!

Nov 29, 2025,05:31 PM IST

சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. தவெகவை நெருக்கடிக்குள்ளாக்க நடக்கும் இந்த முயற்சிகளை விஜய் எப்படி எதிர்கொள்ள போகிறார்? என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் சம்பவத்திற்கு முன்பும் சரி, பிறகும் சரி விஜய் பிரச்சாரத்திற்கு போலீசார் தரப்பில் அனுமதி வழங்குவதில் இப்போது வரை தொடர்ந்து சிக்கல் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதைத் தாண்டி விஜய் எப்படி மக்களை சந்தித்து, பிரச்சாரம் செய்ய போகிறார் என்பது இதுவரை புரியவில்லை. இதற்கிடையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ ஒரு புறம் விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் ஆஜராகி விட்டனர். தொடர்ந்து இந்த விசாரணை நடைபெறும்.




இது தவிர்த்து அரசியல் களத்தில் பல சிக்கல்கள் கிளம்பி வருகின்றன. இவை  நேரடியாக விஜய்க்கு எந்தப் பாதிப்பையும் தராது என்பது உண்மைதான். ஆனால் மக்களை குழப்ப இது கண்டிப்பாக உதவும். விஜய்யை ஏற்கனவே திமுக ஒரு புறம் தாக்கி வருகிறது. இதற்கிடையில் மதிமுக.,வில் இருந்து விலகி மல்லை சத்யா சமீபத்தில் புதிய கட்சி துவங்கினார். அதற்கு, திராவிட வெற்றிக் கழகம் (DVK) என்று பெயர் வைத்துள்ளார். 


மறுபக்கம் புதுச்சேரியில், சார்ல்ஸ் மார்டின் டிசம்பரில் தனிக்கட்சி துவக்க போகிறார். அதற்கு புவெக (புதுச்சேரி வெற்றிக் கழகம்) என பெயர் வைக்க திட்டமிட்டிருக்கிறாராம். இப்படி தவெக போன்றே பெயருடைய கட்சிகள் புதிது புதிதாக முளைத்து வருவதால் அது தேர்தலில் வாக்காளர்களை குழப்புவதுடன், தவெக.,விற்கு வரும் ஓட்டுக்களை தடுக்கவும் வாய்ப்புள்ளது.


மற்றொரு குழப்பம் சமீபத்தில் தவெக.,வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனால் வந்துள்ளது. ஊழல் இல்லாத நேர்மையான ஆட்சியை தருவதாக தான் சொல்லி விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால் ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்த செங்கோட்டையனை கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளதை வைத்து மற்ற கட்சிகள் மிக கடுமையான விமர்சனத்தை முன்வைக்க காத்திருக்கின்றன. 


காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரை தவெக.,வின் கொள்கை தலைவர்களாக வைத்துள்ளார் விஜய். ஆனால் புதிதாக தவெக.,வில் சேர்ந்துள்ள செங்கோட்டையன் தற்போதும் தன்னை அதிமுக கட்சிக்காரர் என அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில், தனது சட்டை பாக்கெட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துள்ளார். அதோடு கட்சி அலுவலக போர்டில் ஒரு புறம் எம்ஜிஆர், ஜெயலலிதா, மற்றொரு புறம் விஜய் இருப்பது போல் வைத்துள்ளார். இதனால் விஜய்யின் அரசியல் அடையாளமே தற்போது கேள்விக் குறியாகி உள்ளது.


அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் விஜய் படமும் இருப்பதற்கு அவர் சம்மதிக்கிறார் என்றால் அதிமுக தலைவர்களை விஜய் ஏற்றுக் கொள்கிறாரா என்ற கேள்வி வரும். இதை வைத்தே விஜய்க்கு எதிராக திமுக தனது விமர்சனத்தை கடுமையாக்கும். விஜய் பிரச்சாரம் செய்வதில் சிக்கல், கட்சி பெயரை மக்கள் மனதில் பதிய வைப்பதில் சிக்கல், கட்சி சின்னம், வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல், கூட்டணியில் நிலைப்பாடு எடுப்பதில் சிக்கல் என ஏகப்பட்ட சிக்கல் இருக்கும் நிலையில், தற்போது செங்கோட்டையனால் அடையாள சிக்கலும் வந்துள்ளது.


இந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் விஜய் நடத்தத் திட்டமிட்டிருந்த ரோடு ஷோவுக்கு அங்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்