சென்னை: 2026ல் தமிழகத்தில் மக்கள் பரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார். தவெக.,விற்கு வெற்றியை தர மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என தவெக.,வில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பிறகு மாலையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இன்று காலை பனையூரில் உள்ள தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்திற்கு சென்ற செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தனது ஆதரவாளர்கள் பலருடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். அவருக்கு தவெக கட்சி துண்டை அணிவித்து, கட்சியின் அடையாள அட்டையையும் வழங்கி, கட்சியில் வரவேற்றார் விஜய். முன்பாக செங்கோட்டையனை வரவேற்று வீடியோ ஒன்றையும் விஜய் வெளியிட்டிருந்தார்.
தவெக.,வில் இணைந்த பிறகு அக்கட்சியின் நிர்வாகிகளுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன். அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் கட்சி துவங்கியதில் இருந்து அவருடன் இருக்கிறேன். அவரால் அடையாளம் காட்டப்பட்டவன் நான். அவரது மறைவிற்கு பிறகு, கட்சி இரண்டாக உடைந்த போது ஜெயலலிதாவின் தலைமையை ஏற்றேன். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சி மூன்றாக பிளவுபட்டது. அதை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என பாடுபட்டேன். அதை வலியுறுத்தியதற்காக கட்சியில் இருந்து என்னை நீக்கி விட்டார். நான் என்று ஒருவர் இருந்தால் இறைவன் தான் யார் என்பதை காட்டுவார்.
தவெகவில் இணைய என்ன காரணம்?
தவெக.,வில் இணைந்ததற்கு காரணம் இருக்கிறது. விஜய் மக்களின் மனங்களை வென்றுள்ளார். அவரை மக்களும் விரும்புகிறார்கள். திமுக, அதிமுக இரண்டும் ஒன்று தான். இரண்டு கட்சிகளும் ஒன்றாக தான் பயணிக்கின்றன. இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது ஒரு கட்சி வர வேண்டும் என நினைக்கிறார்கள். நானும் அதையே நினைத்து தவெக.,வில் இணைந்துள்ளேன். 2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு, விஜய் வெற்றி பெறுவார். டில்லியில் ஆம்ஆத்மி கட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை போல் தமிழகத்திலும் மாற்றம் ஏற்படும் என்றார்.
பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த செங்கோட்டையன், திமுக.,வில் இருந்தோ தேசிய கட்சிகளில் இருந்தோ என்னை யாரும் சந்திக்கவோ, கோரிக்கை வைக்கவோ இல்லை. சேகர்பாபு என்னை சந்தித்ததற்கான புகைப்பட ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்.
ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என கோர்ட்டால் தீர்ப்பளிப்பட்டவர் என்கிறார்கள் அது ஜோடிக்கப்பட்ட வழக்கு. அதில் தான் அவர் குற்றம்சாட்டப்பட்டார் என்றார். அவருடைய சட்டை பையில் ஜெயலலிதாவின் படத்தை தற்போதும் வைத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, விஜய்யின் காரில் கூட அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படம் உள்ளது என பதிலளித்தார்.
தஞ்சையில் கொடுமை.. 13 வருடமாக காதலித்த.. ஆசிரியையை தீர்த்துக் கட்டிய காதலன்!
எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? நானே கடுப்புல இருக்கேன்.. புது வசந்தம் (8)
செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்
2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
தமிழகம் நோக்கி நகரும் புயல்...நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்
லோகேஷ் கனகராஜ்.. 7வது படத்தை இயக்கும் பணியில் தீவிரம்.. அது யாருடைய படம்
கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்...ரிக்டரில் 6.6 ஆக பதிவு
சற்று குறைந்தது தங்கம் விலை... ஆபரண தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.11,770திற்கு விற்பனை!
{{comments.comment}}