சென்னை : சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். அவருக்கு கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக.,வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நேற்று தனது எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து தமிழக சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ.,க்களின் பலம் குறைந்தது. அவர் ராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே அமைச்சர் சேகர்பாபு செங்கோட்டையனை நேரில் சந்தித்து பேசினார். இதனால் செங்கோட்டையன் திமுக.,வில் இணைய போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நேற்று மாலை பட்டினம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு சென்ற செங்கோட்டையன் இரண்டு மணி நேரம் அவருடன் ஆலோசனை நடத்தி விட்டு, புறப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு விஜய் வந்த சிறிது நேரத்திலேயே செங்கோட்டையனின் ஆதரவாளரான சத்யபாமா வந்தார். அவரைத் தொடர்ந்து செங்கோட்டையனும் அங்கு வந்தார். தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர். அங்கு விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் தவெக.,வில் இணைந்துள்ளார்.
தவெக.,வில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சொல்லப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியானது. தமிழ்நாடு முழுவதும் நன்கு தெரிந்த ஒரு அரசியல்வாதி செங்கோட்டையன் என்பதாலும், நிர்வாகத்தில் சிறந்தவர் என்பதாலும் அவரது வருகை தவெகவுக்கு ஒரு புதிய நிறம் கொடுத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}