பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.. குவைத் பரபரப்புத் தகவல்

Mar 02, 2026,05:20 PM IST

குவைத் சிட்டி: குவைத் வான்வெளிப் பகுதியில் பல அமெரிக்கப் போர்விமானங்கள் வீழ்த்தப்பட்டிருப்பதாக குவைத் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளது. இந்த விமானங்களை வீழ்த்தியது ஈரானா என்பது குறித்துத்  தெரியவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.


அமெரிக்காவின் F-15 போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியான நிலையில் அது தற்செயலாக நடந்தாக அமெரிக்கத் தரப்பில் விளக்கம் வெளியாகிருந்தது. ஆனால் பல அமெரிக்க விமானங்கள் வீழ்த்தப்பட்டிருப்பதாக குவைத் கூறியிருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.


ஈரான் இதைச் செய்ததா அல்லது ஈரானுக்கு ஆதரவாக வேறு யாரேனும் களத்தில் குதித்துள்ளனரா என்ற புதிய பரபரப்பும் கூடியுள்ளது.




ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க தயாரிப்பான F-15 போர் விமானம் ஒன்று குவைத்தில் சுழன்று கொண்டு கீழே விழுந்து நொறுங்கும் வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. 

இந்த விமானத்தை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. 


கீழே விழுந்த விமானம் அமெரிக்காவிற்குச் சொந்தமானதா அல்லது இஸ்ரேலுக்குச் சொந்தமானதா என்பதில் தெளிவான தகவல் இல்லை. ஏனெனில் இரு நாடுகளுமே F-15 ரக விமானங்களைப் பயன்படுத்துகின்றன. அதேசமயம், அந்த விமானத்தின் பைலட்டும், கோ பைலட்டும் பாராசூட் மூலம் உயிர் தப்பி விட்டனர்.


சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், போர் விமானம் தீப்பிடித்த நிலையில் மெதுவாகச் சுழன்று கொண்டு கீழே விழுவது போல காட்சி இருந்தது. 


இந்த நிலையில் குவைத் கூறியுள்ள தகவல் மேலும் பரபரப்பையும் பதட்டத்தையும் கூட்டுவதாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்