மச்சான் ஓ நெனப்புலதான்.. மனசும் கெறங்குதே!

Su.tha Arivalagan
Jun 25, 2026,02:49 PM IST

- புலவர் ப.ஈஸ்வரநாதன், சென்னை


மனசும் கெறங்குதே

மச்சான் ஓ நெனப்புலதான்

மனசும் கெறங்குதே...


கரிசக் காட்டுக்குள்ள காதல  சொல்லிப்புட்ட.


கண்டாங்கி சேலையிலே கொசுவமா வந்துப்புட்ட..


ஆத்துக்  கரையில 

ஆடியசஞ்சே நடந்துப்புட்ட..


முரட்டுக் காளையா மனசுக்குள்ள நின்னுப்புட்ட..


மாந்தோப்புல நானும் 

ரொம்பநேரம் காத்திருக்க..


மச்சான் ஒநெனப்புலதான்  மனசும் கெறங்குதே..




ஆல  மரத்துக் காத்தும் வீசுறப்ப..


வாட்டுது ஏக்கமா

உசுருல  தாக்கமா..


மேகம் கருத்திருக்க 

நேரத்துல 

வாமச்சான்..


வானம் தாலாட்ட

மலையில ஊஞ்சலாடலாம்..


இயற்கை இதமளிக்க இம்சைகள் செய்திடலாம்..


மல்லி வாசனையும் மூக்க துளைக்கயில..


மாமன் நெனப்பே  வருது மனசுக்குள்ளே!