அன்பைக் கடன் வாங்கி!

Jun 19, 2026,03:28 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


கண்டநொடி சிந்தையிலே காதலாய்ப் பிறக்கும்


மண்டைக்கணம் வந்தப்படி மர்மமாய் இருக்கும்


உண்டதெல்லாம் வேணாமென்று  ஊணுறக்கம் கெடுக்கும்


கொண்டதெல்லாம் அன்பென்று கொட்டுமுரசு அடிக்கும்


தொண்டைக்குழி விறைக்க விடியவிடியக் கதைக்கும்


சண்டை பலயிட்டு சமாதானமும் பேசும்


கிண்டலாகத்தான் பேசிப்பேசி 

கிறுக்கு பிடிக்க வைக்கும்


வண்டெல்லாம்  காதோரம் வண்ணத்தமிழ் 

பாட்டிசைக்கும்




அண்டத்தில்  பிரியாத காதலர்களென்று முடியும் சூடும்


பிண்டத்தில் மாற்றமேற்படப் பிரிவையும் கூட்டும்


வேண்டாமென்று 

தூக்கியெறிந்து

வேலையும் பாய்ச்சும்


வறண்டுப் போன 

பாழ்நிலமாக உள்ளமும் நொருங்கும்


புரண்ட தடம்மாற பிரண்டு படுத்து

தலையணையையும்

நனைக்கும்


இருண்ட வாழ்வாய்

இரவுப் பகல் கண்ணீர் வடிக்கும்


அகண்ட விழித் திறந்து நினைவுகளையும் மீட்டும்


கெண்டை மீனாய் 

துடிதுடித்து பந்தப்பாசம் வெறுக்கும்


அண்டை வீட்டுக்காரர்களுக்கு தெரிந்தால் அடிக்கடி அலாரமடிக்கும்


உருண்ட உலகமும் உனக்கு எதிராய் நிற்கும்


வேண்டியதெல்லாம் நடக்குமா இங்கே வேதனைக்கு 

பஞ்சமில்லே


அன்பை அடமானம் வைத்து

சிரிப்பை கடன் வாங்கி


வெளியுலகத்துக்காக 

கொஞ்சமாக வலியை மறைத்து சிரித்து


மிச்சத்தை துட்சமாக எண்ணி

வாழ்ந்து விட்டு போகின்றேன் நானுமிங்கே

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்