என் தனிமையின் பேரழகு

Jun 18, 2026,03:58 PM IST

- கவிதா அறிவழகன்


மானிடரைத் திருத்த

இவ்வுலகில் நான்

பிறக்கவில்லை;


விலகிச் செல்லவும்

மனமில்லை.


நான் எனக்கான

பாடத்தைக் கற்றுக்கொண்டதால்

நகர்ந்து கொண்டேன்.


மௌனமாய் பேசும்

இளவேனிற் காற்றும்,




சங்கீதமாய் ஒலிக்கும்

சோலைக்குயிலின் பாட்டும்,


பொழியும் மழையின்

நடனக் கூத்தும்,


என் காயங்களுக்கு

மருந்தாக வித்திட்டன.


அந்தி சாயும்

அந்த விண்வெளியும்,


அலையடிக்கும்

ஆழ்கடலின் அமைதியும்,


மானிடர் தராத

பேரன்பையும்

மனஅமைதியையும்


எனக்குள்

விதைத்துக் கொண்டே இருக்கும்.


மனம் மாறும்

மனிதர்களைவிட,


மாறாத வானத்தின்

விசாலமும்,


கடல் சொல்லும்

கவிதையும்,


என்னை

அழகுபடுத்துகின்றன.


வீண் விவாதங்களில்

பேதங்கள் உருவாவதைவிட,


சூரியனைப் போன்று

கம்பீரமாய் நிற்பதும்,


திருப்தியடையாத

மனிதர்களைவிட,


நட்சத்திரங்களின் நடுவே

நானும் ஒரு

நட்சத்திரமாய் இருப்பதும்,


மனதிற்கு

ஆறுதலாக இருக்கிறது.


கோடிகளாய் மனிதர்கள்

கூடி வாழும்

இந்த உலகினில்,


தனிமையின் பெருவெளியில்,


இயற்கையின் மடியில்,


எனக்கான

பேரமைதியை


நான் கண்டுகொண்டேன்.


இனி எதற்கும்

மனம் கலங்காமல்,


சுயமரியாதையின் மடியை...


தாயின் மடியை...


தலை சாய்த்து,


நிம்மதியாய்

உறங்குவேன்!


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்