- அ.வென்சி ராஜ்
எம்மை குளிர்விக்க வந்தவளே...
கதிரவனின் கோபம் தணிக்க காற்றோடு வந்தாயோ....
எரிபிழம்பின் வெப்பம் குறைக்க கருமேகத்தோடு வந்தாயோ...
மழை மகள் நீ வருவதைக் கூற இடி முழக்கம் செய்தாயோ..
நீர் தோரணம் போதாது என்று மின்னல் தோரணம் தந்தாயோ...
புவிமகளை குளிர்விக்க பறந்தோடி வந்தாயோ..
நீ...
துளித்துளியாய் வந்தாலே துள்ளித்தான் குதித்திடுவேன்..
பெரு மழையாய் வந்ததனால் ஒதுங்கி நின்று ரசிக்கின்றேன்..
கோடை மழையே..
எம்மை
குளிர்விக்க வந்தவளே...
நிலம் நனைத்து சென்றவளே..

இடி மின்னலோடு நீ ஆரவாரம் செய்வதனால்..
இதமாய் உன்னை ரசிப்பது கொஞ்சம் குறைந்து தான் போகிறதோ...
எது எப்படியோ...
வந்த வேலையை வாகாய் செய்துவிட்டு தான் போயேன்...
வெப்பம் குறைந்த மகிழ்வில் வாயடைத்து போய் நிற்கின்றேன்..
வந்த உனை வரவேற்பதா...?
பெரு மகிழ்வில் கரம் ஏந்தவா என்று.....!
(அ. வென்சி ராஜ்... இவர் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பண்ணைவிளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}