- டிலாணி ஸ்ரீதரன்
விதியென வீழ்ந்தான்
மணந்தவன் மண்ணுக்குள்ளே ,
சதியென்ன செய்தாள்
சமூகத்தின் பார்வையிலே,
மூதேவியென முணுமுணுப்பு
அயலவர்கள் வீடுகளிலே,
வீண்பழிகளும் விமர்சனங்களும்
வீதியில் நடக்கையிலே,

குமுறல்களில் குருதியும்
உறைந்துப் போகையிலே,
குற்றமென்ன செய்தேன்
குடியானேன் குடிசையினுள்ளே,
விடுதலையென வீராப்பாக
தாய்வீடு செல்லயிலே,
நல்லக்காரியமும் நடக்குது
எனக்கொரு அழைப்பில்லையே,
சித்தம் கலங்கியதே
பித்தும் பிடித்ததே,
இறந்தாரவர் விபத்திலே
விடப்பட்டேன் தெருவிலே,
புத்தனின் மொழிப்பேசும்
அற்பர்களையும் புறந்தள்ளியே,
பிள்ளைகளை வாழவைக்கவே
பிறப்பெடுத்தேன் வீரத்தாயாகவே.
கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!
செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்
"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை
பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?
"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"
short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!
சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!
Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!
{{comments.comment}}