கைப்பேசியில் கரைகிறது மனமே?

Su.tha Arivalagan
Nov 20, 2026,02:47 PM IST

- புலவர் ப. ஈஸ்வரநாதன், சென்னை


விளம்பர மோகங்கள் வளர்ந்தே நிக்குதே 

தொலைபேசியும் தொல்லையாய் கையில் சிரிக்குதே 

பொய்யான ஆதரவிலே புகழிடம் தேடுதே 

பொங்கி வழியும் புன்னகையும் பொய்யானதே

நிழற்படம் எடுப்பதே நித்தமும் பொழப்பானதே 

கைபேசியின் கவர்ச்சியில் அத்தனையும்

அடங்கியதே...

-

கலியுகம் மாற்றிட களத்தில் போராடிடு 

ஏழ்மையை மறைக்கும்  மாயையும் போக்கிடு 

வறுமையில் குடும்பமும வாடியே வாழுதே   

வீதியில் வந்தே பொழப்பையும்

தேடுதே 

மனிதநேயமோ மண்ணில் மறைந்தே  போகுதே 

ஏழையின் துன்பத்தில் விளம்பரமும்  சுழலுதே....

-




உதவிகள் செய்வதை உயர்வாய் எண்ணாதே?....

சிந்தித்து செயல்படு சிறப்பாய்  உதவிடு... 

வாழும் வாழ்க்கையை பெரிதாய் நினைத்திடு

நிலமைகள் மாறிடும் நீயும் மறவாதே

வறுமையில் நீங்கிடவே வலிமையை தந்திடு

இல்லறம் சிறந்திடவே 

இரக்கமனம்  கொண்டிடு ...

-

இயலாமைப் போக்கிடவே 

இன்றே விரைந்திடு 

இன்முகம் காத்து துன்பம் துடைத்திடு

பாசாங்கு தவிர்த்து துயரம் போக்கிடு  

உதவும் கரங்களாய் உண்மையாய் வாழ்ந்திடு ...

வாழும் வாழ்க்கையை வளமாய் மாற்றிடு 

உலகமே மதித்திடவே உண்மையாய் உதவிடு  

நல்லறம் போற்றியே

நாட்டினை உயர்த்திடு!