திரு மாங்கல்யம்

Su.tha Arivalagan
Jul 07, 2026,01:12 PM IST

- புலவர் ப. ஈஸ்வரநாதன்


ஆணாகப் பிறந்தவரை 

ஆளாக மாற்றிடுமே


மரியாதை என்பது 

மனதில் வந்திடுமே 


மாங்கல்யம் வந்ததுமே

திருவும் திருமதியாகுமே 




பொறுமையும் பொறுப்பும் 

உணர்த்திடும் வாழ்க்கையே 


மாடாய்ச்  சுற்றியவனை 

மனிதனாக்கிய மாங்கல்யமே


எனக்குள் நீயாக...

உனக்குள் நானாக...


நமக்குள் ஒருவரை 

நாமும் பெற்றிட


நாளும் காத்திருப்போம் 

நமக்கான வாழ்வைத்தேடியே


திருமாங்கல்யம்       

தந்துனானே வாழ்க்கையும் திருவிழாதானே


(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர். மற்றும் நெறியாளர்)