- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
நீலவண்ண
மேகமென
கடல் மீது
மோகம் கொண்டு
காதலோடு
கால் பதிக்க
வந்தவளே
கடல் அலையை
ரசிக்க வந்தேன்
கன்னி உன்
அழகில்
மயங்கிப் போனேன்

கடல் அலையா
இல்லை உன்
கூந்தல்
அலைபாயும்
காட்சியா
மனதில் பதிய மறுக்கிறது
கற்பனையை
தூண்டும்
காரிகையே
உன் பாத கொலுசின்
ஓசையா
இல்லை
அலை கடலின்
ஆர்ப்பரிக்கும்
ஓசையா
இயற்கையின்
படைப்பில்
வியந்துதான்
போகிறேன்
என்னை
கவிஞனாக்கிய
அழகு
தேவதையே
கடலோரம்
கால் பதித்திடவே
உனை தழுவிச்
செல்ல அலைகளுக்கும்
போட்டியடி
அலைபாயும்
கடலோடு
நுரைமிதக்கும்
கரையோடு
மண் அரித்துச் செல்லும் காலோடு
ஆனந்தமாய்
நிற்கும்
உன்னோடு
என்னோடு கொஞ்சம்
உறவாடிச் சென்றது
என் பேனா
உன்னை
வர்ணித்து
என்னை
கவிஞனாக்கி
இன்னும் தீராத
கரைமோதுகிறதோ...!
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}