ஆத்தோரம் நாணலாக அத்தமகனே காத்திருக்கேன்
Nov 23, 2026,03:41 PM IST
- புலவர் ப.ஈஸ்வரநாதன், துபாய்
அத்தப்பெத்த
அய்த்தானே
அழகான
மன்னவனே
பாசத்த
தந்துபுட்டு
பக்குவமா
போனவனே
வரப்போரம்
நடக்கயிலே
இதயத்த
இழுத்தவனே
தாழம்பு
வாசனயா
தென்றலோடு
வந்தவனே
செங்காத்து
வீசயிலே
செக்கச்
செவந்தவனே
சோறுகொண்டு போறமச்சான்
சொகமாத்தான்
வாரானே
ஒத்தமரம்
ஓரத்திலே
ஒய்யாரமா
மறஞ்சிருக்கேன்
மழக்காத்தும்
வந்துடுச்சு
அந்திமாலை.
நெருங்கயிலே
காத்திருக்கேன்
கண்ணாலம்
கட்டிக்கவே
காலமெல்லாம்
தவமிருக்கேன்
(புலவர் ப.ஈஸ்வரநாதன். சென்னை. தமிழ் இலக்கியம் பயின்று பி.லிட் பட்டம் பெற்றவர். இலக்கிய பற்றாளர், பேச்சாளர். கவிஞர். பல இலக்கிய மன்றத்தில் நடுவர் மற்றும் நெறியாளர்.)