வாழ்நாள் முழுமைக்கும் அடியேனாய் அடியேன்!

Nov 23, 2026,02:53 PM IST

என்னவளின் அன்பிற்கு 

எந்நாளும் அடியேன்!

என் மீது காட்டும் பரிவுக்கு 

எப்போதும் அடியேன்!


அவளாலே வாழ்கின்றேன் 

அதனாலே அடியேன் 

எனக்காக வாழ்கின்றாள்

அதனாலே அடியேன்!


என் சிந்தையிலே நிறைந்த 

என் மங்கை அவளுக்கு 

இப்போதும் எப்போதும் 

முப்போதும் அடியேன்! 




முடிவிலா மகிழ்வு தரும் 

எழில் நங்கை அவளுக்கு 

என்ன கைம்மாறு செய்வேன்

இந்த அவள் அன்பிற்கு அடியேன்


பேச்சிலும் மூச்சிலும் 

நிறைந்த நிறைமதி அவளுக்கு

ஆயுள் முழுமைக்கும்

அடியேனாய் அடியேன்!


சொல்லாலும் செயலாலும் 

எனை நேசிக்கும் என்னவளுக்கு

வாழ்நாள் முழுமைக்கும் 

அடியேனாய் அடியேன்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்