Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

Su.tha Arivalagan
Sep 25, 2026,10:26 AM IST

- சுதா திருநாராயணன்


அந்தாதி வினா விடை.. இது என்ன புதுசா இருக்கே என்று யோசிக்கறீங்களா.. வெள்ளிக்கிழமையும் அதுவுமா ரொம்ப யோசிக்காதீங்க.. வாங்க நானே நல்லா விளக்கிச் சொல்றேன்.


அந்தாதி என்றால் என்ன? ஒரு பாடலின் இறுதி எழுத்து, அசை, சீர் அல்லது அடி அடுத்த பாடலின் முதலாக வருவது அந்தாதி எனப்படும். அதே பாணியில் அமைந்ததுதான் இந்த வினா விடை.. அதாவது முதல் கேள்விக்கான விடையின் முடிவு எழுத்து அடுத்த கேள்விக்கான பதிலின் ஆரம்பமாக இருக்கும்.


எப்படி சூப்பரா இருக்குல்ல.. சரி இப்போ விளையாடப் போகலாமா. முதல்ல கேள்விகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கு.. கேள்வியின் இறுதியில், அடைப்புக் குறிக்குள் இருக்கும் எண்கள் எத்தனை எழுத்துச் சொற்கள் என்பதை குறிக்கிறது.


சரி வாங்க கேமுக்குள்ள போய்றலாம்.




1) .........வேகம் (2)

2) பிஸ்கட் செய்ய  ஏற்றது (2)

3 )வட்டாட்சியர் பணிபுரியும் இடம் (3)

4) உடலின் மிகச் சிறிய எலும்பு உள்ள இடம் (2)

5) தட்டாம்பூச்சி (3)

6) வாய்வினால் அல்லது ஆர்வத்தினால் வரும் (4)

7) ஒட்டுண்ணி அல்லது கிருமி (5)

8) சர்ச்சை செய்யாதே (6)

9) வானத்திலிருந்து இறங்கி வருபவர்கள் (3)

10) துணிச்சலா? (4)

11) மேல்......காலி (2)

12) பம்பாய் டில்லியில் கிடைக்கும் ஓர் காய்கறி (3)

13) பச்சை குத்துவது (3)

14) கல்யாண மேளம் (4)


விடையைக் கண்டுபிடிச்சுட்டீங்களா.. சரி அது சரியான்னு இப்போ செக் பண்ணலாம்.. இதோ கேள்விகளுக்கான விடைகள்.


1) ஆமை

2) மைதா

3) தாலுகா 

4) காது

5) தும்பி

6) பிடிப்பு

7) புல்லுருவி

8) விவாதிக்காதே

9) தேவதை

10) தைரியமா?

11) மாடி

12) டிண்டா

13) டாட்டு

14) டும்டும்


எல்லாஞ்சரி.. அது என்ன டிண்டா.. உங்க மைன்ட் வாய்ஸ் கேட்டுருச்சு.. டிண்டா என்பது காய் சௌசௌ போல ஒரு வகை காய். ஆனால் தோல் சீவத் தேவையில்லை. குழம்பு பொரியல் எல்லாவற்றிலும் இதை உபயோகப்படுத்தலாம். இந்த டிண்டா, வட இந்தியா மற்றும் மகாராஷ்டிராவில் பிரபலம்.. இந்தக் காயை செல்லமாக ஆப்பிள் பூசணி என்றும் சொல்வார்கள்.


Okay friends, Have a wonderful weekend!


(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில்  பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில்  தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)