Feel Good Poem: நாம்!
Aug 25, 2026,10:52 AM IST
- ரா. பிருந்தா ஜெயந்தி
கருத்தில் கலந்த கண்மணியே!
என் மனத்திரையில் உன் முகம் ஓடிக் கொண்டிருப்பதால்
எனக்கு
இரவுமில்லை பகலுமில்லை.....
கோபம் வரும் எனக்கும்.....
உன்னிடத்தில்
அணைந்த நெருப்பாகி இருக்கிறேன்
ஏன் ......?
கண்ணாளா......
மன ஆசைகளுக்கு
காலம் தடாவென்றாலும்,
நம் மனங்கள் அன்பெனும்
நூலில் கோர்த்திட்ட நறுமலராகி இதயத்தில் மணம் வீசுகிறது,
நுகர்ந்தாயா ......
என் அழகே.......
நீ அங்கே
நான் இங்கே எனினும்
நாம் நினைவுகளால் சங்கமித்துக் கொண்டுள்ளோம்,
உணர்கிறாயா .....
உன்னில்
கலந்தேன்......
கண்டு..... அறிந்தனையோ ........
ஆதலால்.....
இரண்டல்ல,
ஒன்றே நாம்......
(ரா. பிருந்தா ஜெயந்தி, நெய்வேலி)