நீயும் நானும்!

Su.tha Arivalagan
Sep 15, 2026,04:25 PM IST

- பிருந்தா ஜெயந்தி. ரா


விழிகளில் விதையாகி 

எனதெண்ணத்தில்

ஏகனாகி 

எங்கும் எதிலும் தோன்றி 


மலராய் மலர்ந்திட்டு

மனதினில் 

மணம் பரப்பி....


காலமெல்லாம் கனியாகியெனக்கு

பல்கிப் பெருகி 

பழரசமானாய்....


அளவில்லாது அள்ளியள்ளி 

அலுக்காது அருந்துகிறோம்

நம் காதலை.....




இப்பிறப்பிலும்.....,

தோன்றிட்டால் 

மறு பிறப்பிலும் 

வேறொருவர் 

இடை வாராது 

கடைவழி வரையில் 

நாம் மட்டும் 

இணைந்திருந்து 

இன்புற்றிருந்து 

வாழ்வோம்.....


நீயின்றி நானுமில்லை 

நானின்றி நீயுமில்லை 

நாம் நன்கிருந்தால் 

போதும் அன்பே