மரபின் மறைநிலை மொழி

Su.tha Arivalagan
Aug 01, 2026,04:18 PM IST

- இரா.ஸ்ரீப்ரியா, சென்னை


புராணம் பேசும் சுவர் ஓவியம்

மிருகம் மனிதம் கலந்த உருவம்


காலம் கடந்து வந்த கதைகள்

சின்னம் சிந்தனை தூண்டும் வடிவம்


வண்ணம் வாழ்வு சொல்வது போல

மரபின் மாயம் நம்முள் எழும்




அர்த்தம் அடங்கிய ஆழம் நிறை

உலகம் உணரும் பழமையான நினைவு


கலைக்குள் மறைந்த உண்மை பேசும்

நாம் காணும் வாழ்க்கை பிரதிபலிப்பு.


(R. SRIPRIYA , BT ENGLISH , (Creative Writer) , GHSS KOLAPAKKAM , Kanchipuram District , Tamilnadu)