அக்னிப் பறவையாய் நின்று வெல்ல வா !

Su.tha Arivalagan
Nov 12, 2025,05:13 PM IST

- அ.சீ. லாவண்யா


மனிதி உன் மதியால் தெளிந்து வா 

கடந்த காலங்களை கடந்து வா 

சென்ற நொடிகளை நேரங்களை எண்ணி வா 

உன்னால் முடியாது என்று கூறிய வாய்களுக்கு பூட்டு போடவா 

உன்னில் இருக்கும் வீரத்தை வெளிக் கொண்டு வா 

உன்னை அழைக்க நினைக்கும் பருந்துக்கு முன்

அக்னிப் பறவையாய் நின்று வெல்ல வா 

பதுங்கிப் பாயும் புலியாக சிறுத்தையாய் இல்லாமல் 

கம்பீரமாய் பாயும் சிங்கப் பெண்ணாய் 

பெண்ணே உன்னால் முடியும் என்று வெற்றிக்கொடி எந்த வா


--




வாழ்க்கை எனும் பாதையில் 

ஆயிரம் தடுமாற்றங்கள் 

சாதிக்க வேண்டும் என்ற தேடலில்

ஆயிரம் சோதனைகள் 

வெற்றிக்கான அடிகளை எடுத்து வைப்பதில் 

ஆயிரம் தடைகள் 

இவ்வாயிரம் தடைகள் வந்தாலும்

சாதிக்க வேண்டும் என்ற துடிப்பிலும் 

தன் நம்பிக்கையிலும் சிறகடித்து 

நம்பிக்கையோடு இலக்கை நோக்கி ஓடி 

சாதிப்பதே ஒரு பெண்ணின் வெற்றி


--


விழுவதும் எனக்கு புதிதல்ல 

எழுவதும் எனக்கு புதிதல்ல 

விழுந்தாலும் எழுவேன் 

உதயமாகும் சூரியனைப் போல் 

வெற்றியும் எனக்கு புதிதல்ல 

தோல்வியும் எனக்கு புதிதல்ல 

துவண்டு போனாலும் தக்க சமயத்தில் விரைந்து எழுவேன் 

தடைகள் பல வந்தாலும் 

படைகளே வந்தாலும் 

நம்பிக்கை எனும் கவசத்தை மனதில் அணிவேன்


(லாவண்யா ஒரு இளம் கவிப் புயல், எழுத்தாளர், சாதிக்கத் துடிக்கும் சிங்கப் பெண். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் சாதனையாளர்)