எங்கே என் .. யாதுமானவன்?

Su.tha Arivalagan
Jan 22, 2026,11:39 AM IST

- கபிசப்ரி தென்றல், தென்காசி


தேடுகிறது விழிகள் 

எங்கே யாதுமானவன்?


இதயத்திற்குள்

துடிக்கின்றது இதயம் 

நின் நினைவலைகளாக


விட்டு சென்ற இடத்தை 

இமைக்காமல் பார்க்கின்றன

நின் உருவம் பதிந்த விழிகள்...


நின் கரங்களுக்குள் 

என் கரங்கள் அடங்கிய 

பொழுதை தேடுகிறதே..




வெறிச்சோடி கிடக்கின்றன 

நாம் தடம் பதித்த 

பாதைகள்.......


புவியீர்ப்பு விசையே 

தோற்று போனதே

நம் விழிகளின் சந்திப்பில்...


நாம் பேசிய மொழி 

மௌனமொழி

என்பதால் என்னவோ

மௌனமாகவே கடக்கின்றதே

நொடிகள்.....


தேடுகிறதே விழிகள் 

எங்கே யாதுமானவன்?