இப்படிக்கு மழை!

Jan 21, 2026,10:30 AM IST

- கபிசப்ரி தென்றல், தென்காசி


என் வருகையை 

விதை விதைத்து 

எதிர்பார்ப்பவர் பலர் 


நெகிழி யைப் புதைத்து 

நான் வர முடியாமல் 

தடுப்பவர்கள் சிலர்


ஆறறிவு மனிதா

என் தவறுதான் என்ன.....




வெண் மேகமான என் 

தோழியை காயப்படுத்துகிறாய்

நீ ஆளும் தொழில் புகையால்......


மனிதா என் தவறுதான் என்ன 


என் உயிர்நாடி யான

பசுமையைத் தீக்கிரையாக்கி

உன்னால் அனலில் எப்படி 

வாழமுடிகிறது .....


நம் இருவருக்குமான 

பூமித்தாயை 

பொங்கியெழச்  செய்து 

நீயே வீழ்கிறாய் அவளின் கருவறைக்குள்......


மனிதா உன் தேவைதான் என்ன..........


உயிர் தாயின் மார்பிலே

குத்துகிறாய் AI என்ற‌

ஈட்டியால்.....


தாயானவள்  தாரை வார்க்கிறாளே 

என்னை

நீ உயிர் வாழ......


AI மனிதா உன் ஞானம் தான் என்ன..


மனமகிழ்வுடனும் 

மனநிறைவுடனும் 

வந்து சென்ற 

என்னை 

அனலுடனும்

அமிலத்துடனும்

வரவைக்கிறாய்....


என்ன லாபமோ உனக்கு....


பொங்கியெழ வைக்கிறாய்

சாந்தமான என் உயிரான

ஆழியை.....


ஆறறிவு மனிதா உன் தேவைதான் என்ன?

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்