விருப்பு வெறுப்பைக் கடந்த வாழ்வு.. திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (4)
- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்
திருக்குறள்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
பொருள்
விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைச் சார்ந்தவர்களுக்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை என்பது இக்குறளின் பொருள்.
கவிதை வடிவில் ஒரு சிந்தனை!
விருப்பம் மட்டும் வளர்ந்தால்
வெறுப்பும் வந்து சேர்ந்திடுமே!
ஆசைகள் நம்மை ஆட்டிவைத்தால்
அமைதியும் நம்மை விட்டுச் செல்லுமே!
விருப்பு வெறுப்பைக் கடந்த இறைவனை
உள்ளத்தில் நினைத்து வாழ்ந்திடுவோம்!
இன்னல்கள் கடந்து நடந்திடுவோம்!
வாழ்க்கைப் பாடம்
விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வாழ்வதன் சிறப்பைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.
மனதில் இறைநம்பிக்கை இருந்தால், வாழ்வில் மனஅமைதிக்கு வழி பிறக்கும்!
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)