செவ்வாயே... மங்களமான நாளானவளே!

Su.tha Arivalagan
Nov 17, 2026,10:49 AM IST

- ரஞ்சிதா மணியரசன்


முகமுழுதும்

மருதாணி பூசியதால்

சிவந்தாயோ


வெட்கத்தினால்

சிவப்பானாயோ


கொவ்வைப்பழமென

கோவம் கொண்டிருக்கிறாயோ


நல்லகாரியங்கள்

அத்துனையும்

உன் வரவின்பின்னே...


வேலனுக்கும்

துர்கைக்கும் உரித்தானவளாம்




உனக்கு யாரைப் பிடிக்கும் ...

கேள்வியில் நான்...


போர்க் கடவுளான

டயர் கடவுளின்

பெயரில் பிறந்தவளே


உதிரத்தின் வண்ணத்தால்

கோள்களில் செவ்வாயானாயோ...


என்னவளுக்கும்

பிடித்தவள்

நீயே தான்...!


(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)