இரவில் நிலா

Su.tha Arivalagan
Nov 18, 2026,04:56 PM IST

- ரஞ்சிதா மணியரசன்


நிசப்தத்தை

விரும்புவளாக...


வானில் உலாவிடும்

ஒற்றைத் தேவதையே


யாரும் காணாத இரவில் யாரைத் தேடிப் பயணிக்கிறாய்...


உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை


நின்னைத் தின்றே

நித்தம் உயிர்த்திருக்கும்

எழுதுகோல்

கள்வனையா...


உன்னை காதலித்தே 

பசி தீர்க்கும்

கவிஞர்களையா...




யாரைத் தேடுகிறாய்

அடர்ந்த இருட்டில்

யாருக்காக மறைந்து மறைந்து ..

கண்களால்

கணைகள் வீசுகிறாய்.


அவளுக்கு

மட்டுமே

கொடுத்து வைத்திருக்கிறது

பூமியை

வானமாய்...

இரசிக்கும் விந்தை...


வித்தியாசம்

ஒன்று மட்டும்தான்

வண்ண வண்ண

விண்மீன்கள்...

அவ்வளவே!


(ரஞ்சிதா மணியரசன், M.A.,B.Ed..,Eng, கவிஞர், ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளி, நாமக்கல்லைச் சேர்ந்தவர்)