அம்மா(ஆ)ச்சி
Feb 09, 2026,11:02 AM IST
- ரதிதேவி
அன்னைக்கு அன்னையே....
பெற்றெடுத்தவள்
அவளே என்றாலும்
உந்தன் மடியில் துயில்ந்து
மனமகிழ்ந்தேனே...
பாராட்டி சீராட்டி வளர்த்தாயே
பாலூட்டுபவள் அன்னையே என்றாலும்....
உந்தன் மடியே
கதி என கிடந்தேனே ...
உன் கரம் கொண்டு
எழுத பழக்கினாயே
என் விரல்களை.....
என் கரம் பிடித்து
அழைத்து சென்றாயே
பாடசாலைக்கு....
இப்போதும் செல்கிறேனே
உன் நினைவுகளுடன்
பாடசாலைக்கு......
அனுதினமும்
தோளுக்கு மேல்
வளர்ந்தாலும்
வாரி அணைத்து
முத்தம் இட்டாயே.......
மறுஜென்மம் என்று
இருந்தால் உனக்கு மகளாக பிறக்க வேண்டும்!