கையில் விழுந்தாய்.. கரைபுரண்டோடினாய்.. புழுதியாக மறைந்தாய்!
Oct 29, 2026,04:54 PM IST
- ரதிதேவி
ரதிதேவி எழுதிய அழகிய ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு.. உங்களுக்காக!
வெள்ளம்!
கையில் விழுந்தாய்
கரைபுரண்டோடினாய்
சேறாக மறைந்தாய்
காலணி
தங்கமாக
இருந்தாலும்
தாம்பாளம்
செல்ல முடியாது
தாழ்ப்பாள்
அவசரமாக
ஆயிரம் வேலைக்கு
சென்றாலும்
மறவாமல் போடப்படும்
நுங்கு வண்டி
ஏழைச் சிறுவனுக்கு
ஏசி கார் வண்டி
ஆன்லைன் காதல்
உயிரற்ற பொருள்!