பொறாமை என்னும் பொல்லாக்குணம்
- கவிஞர் க. முருகேஸ்வரி
கொளுத்தத் தான் நினைக்கிறேன்..
ஆனால்
அவ்வப்போது கொழுந்து விட்டு எரிகிறது!!!
அடக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால் சில நேரங்களில்
அடங்கமறுக்கிறது..
பொசுக்கத்தான் நினைக்கிறேன்
ஆனால்
பொசுக்கென்று பொங்கி எழுகிறதே!
என் செய்வேன்....
பல நேரங்களில் வெந்து தணிகிறேன்.....
புரிந்து கொள்ள கொஞ்சம் அவகாசம் தான் தேவைப்படுகிறது.....
புத்தகம் தேடு...
புனித நூல்களில் மூழ்கு...
முடியவில்லையே....
சரி விடு...
அன்பே சிவம் படம் பார்....
நம்மைப் பக்குவமாய் பக்குவப்படுத்தி விட்டதே..
இந்த பொறாமை என்னும்
பொல்லாக் குணம்!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).