வீரத்தின் அடையாளம்.. மறக்க முடியாத பஞ்சாப் சிங்கம் பகத்சிங்!

Su.tha Arivalagan
Mar 23, 2026,03:33 PM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ வீரமணிகண்டன்


1931-ல் தூக்கிலிடப்பட்ட பகத் சிங், சுக்தேவ் தாப்பர் மற்றும் சிவராம் ராஜகுரு ஆகியோரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், மார்ச் 23 அன்று அனுசரிக்கப்படும்    வீரர்களின் நினைவு ( ஷஹீத் திவாஸ்)

நினைவு நாளாகும்.


பகத்சிங் கவிதை


வீரத்தின் அடையாளமானவரே!

இளம்வயதிலேயே போராடியவரே!


அஞ்சா மனதை கொண்டவரே! 

விடுதலையை விதைத்தவரே!


புரட்சி நீடுழி வாழ்க என்றவரே!

சுதந்திர கனவை உருவாக்கியவரே! 




சுதந்திர குரலை எழுப்பியவரே!

அநீதியை எதிர்த்து உடைத்தவரே!


அச்சமின்றி போராடிய வீரரே!

பல சாதனைகள் புரிந்தவரே!


விடுதலைக்காக தனது உயிரை அர்ப்பணித்தவரே!

இந்திய மண்ணின் பெருமை சேர்த்தவரே!


(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில்  மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)