Respect Your Cat Day: பூனைதானே.. அப்படின்னு நினைக்காதீங்க.. அவங்களையும் மதிக்கணும்!

Su.tha Arivalagan
Mar 28, 2026,06:16 PM IST

- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ வீரமணிகண்டன் 


யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் . பூனைக்கு மணி கட்டுவது யார்? என்று பழமொழியை கேட்டதுண்டா? வாங்க இன்றைய நாளில் பூனையின் சிறப்பை பற்றி தெரிந்து கொள்வோம் .


பூனையை மதிக்கும் நாள் (Respect Your Cat Day)


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 28 அன்று பூனையை மதிக்கும் நாள் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் Respect Your Cat Day என்று அழைக்கப்படுகிறது. பூனைகளுக்கு அன்பும் மரியாதையும் காட்டும் நாளாக கருதப்படுகிறது.


ஒவ்வொரு வீட்டிலும் நாய், பூனை போன்ற செல்ல குட்டிகள் வளர்ப்பதை பார்க்கிறோம்.  பூனைகள் மனிதர்களின் செல்லப்பிராணிகளில் முக்கியமானதாக காணப்படுகிறது. அவை மிகவும் அழகான மற்றும் சுறுசுறுப்பான உயிரினம் ஆகும். பூனைகளை நாம்  வீட்டில் வளர்பதால் நமக்கு மகிழ்ச்சியும் அமைதியும்   தருகின்றன.

அவைகளுடன் விளையாடுவது மன அழுத்தத்தை குறைக்கிறது.




பூனைகளை அன்பாக பராமரிக்க வேண்டும். அவைகளுக்கு சத்தான உணவு அளிக்க வேண்டும். தூய்மையான தண்ணீர் கொடுக்க வேண்டும். அவைகளின் உடல்நலத்தை கவனிக்க வேண்டும். அவைகளை அடிக்கவோ துன்புறுத்தவோ கூடாது. பாதுகாப்பான சூழல் வழங்க வேண்டும்.


பூனைகள் மிகவும் புத்திசாலி உயிரினங்கள் ஆகும். அவைகளுக்கு தனித்துவமான பழக்கங்கள் உள்ளன. பூனைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. அவைகளை புரிந்து கொண்டு நடக்க வேண்டும். செல்லப்பிராணிகளை மதிக்க கற்றுக் கொடுக்கிறது. குழந்தைகளிடம் கருணைத் தன்மை காணப்பட காரணமாக இருக்கின்றன.  பூனைகள் நல்ல தோழிகளாக இருக்கின்றன.


நாம் வீடுகளில் பூனை போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கும் போது அவற்றை நன்றாக கவனித்து பராமரிக்க வேண்டும். செல்லப் பிராணிகளை தூய்மையாக கையாள்வது மிகவும் முக்கியம். பூனை போன்ற செல்லப் பிராணிகளின் முடி வீட்டில் உதிராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மூலம் நமக்கு நோய்கள் வராமல் முன்னெச்சரிக்கையாக பார்த்துக் கொள்ள வேண்டும். 


வீட்டில் பூனைகள் இருந்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பதால்  அவைகளுக்கு நேரம் ஒதுக்கி  பூனைகளை கவனித்துப் பார்ப்போம். எல்லா உயிரினங்களையும் மதிப்பது நமது கடமை என்பதை உணர்வோம். பூனைகளை பாதுகாப்பது முக்கியம் என்பதை உணர்ந்து  அவைகளை அன்புடன் வளர்ப்போம். இன்றைய நாளை 

பூனையை மதிக்கும் நாளாக கொண்டாடி மனிதநேயத்தை வளர்ப்போம்.


(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில்  மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)