எழுத மறந்த மடல்!

Su.tha Arivalagan
Dec 24, 2025,10:01 AM IST

- சு.யாமினி பிரியா


என் அன்னையைப் பெற்ற அன்னையே!!!

எனது பிறப்பை பொக்கிஷமாக போற்றிய ஆத்மாவே!!

உனது எல்லையில்லா அன்பு வாழ்க்கை அழகானது என உணர வைத்தது!!!

புத்தாடை எடுத்து அணிவித்துஅழகு பார்த்தாய்!!!

பலகாரங்கள் நீ செய்து எனை நீ ருசிக்க வைத்தாய்!!!

பழங்கதைகள் பேசி வாழ்க்கையே புரிய வைத்தாய்!!!

ஏழ்மையிலும் கூட இளவரசியை போல உணர வைத்தாய்!!!

உற்றார் உறவினர்களை தாங்கிப் பிடிக்கும் யாரும் அறியா வேராய் இருந்தாய்!!!

எனது பிறந்தநாள் வாழ்வின் சிறந்த நாள் என கொண்டாடினாய்!!!

உன்னுடைய சிறந்த வாழ்வு அனைவருக்கும் ஒரு பாடம்!!!

நெஞ்சம் நிறைந்த ஆசைகளோடும் கண்களில் கனவுகளோடும் நித்தம் நித்தம் என்னை ரசித்தாய்!!!

நான் பிறந்தது முதல் நீ என்னை வளர்த்து எடுத்தாய்,




வயது மூப்பு நீடைந்த போது நீ குழந்தை ஆனாய்,

நான் உனக்கு அன்னையானேன்!!!

உடல் நல பாதிப்படைந்து நடமாட முடியாமல் நீ ஆனாய்

அதைக் காண முடியாமல் ஜடமானோம் நாங்கள்!!!

படுக்கையிலும் கூட அன்பான வார்த்தைகள் ஆறத் தழுவியதே!!!

வாழ்க்கையில் வழிநடத்தல்கள் அங்கிருந்தும் தொடர்ந்தனவே!!!

மருத்துவமனையில் இருந்து கிடைக்கப்பெறும் செய்திகளை செவி கேட்க மறுத்தனவே!!!

நீ மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் செல்லும் செய்து இடியாய் வந்து விழுந்தனவே!!!

என்றோ இயற்கையுடன் கலந்தாய்!!!

இன்றும் எங்களது நினைவு அலைகளில் வாழ்கிறாய்!!!

கடவுள் தந்த பொக்கிஷமே அடுத்த ஜென்மத்தில் நீ எனக்கு மகளாய் வேண்டும்!!!!


(கவிஞர் சு.யாமினி பிரியா, கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்)