நதியும் நீயும் ஒன்றோ!

Su.tha Arivalagan
Apr 30, 2026,03:03 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


நில்லடி 

என்

கருப்புராணி 

பதில் 

சொல்லடி


வளைந்து 

நெளிந்து

நளினமாக

இருக்கிறாய்

வஞ்சியோ!


எங்கிருந்து  

வருகிறாய்

போகும்

இடம் 

எதுவோ!




உன்னை 

நம்பி

வரலாமா

வழித்துணை

நீதானே


நதிகள் 

கடல் 

தேடும் 

கருவாச்சி

நீயெதை


வழிப்போக்கன்  

முதல்  

வசதியானவன்

வரை  

வழிகாட்டுவாய்


உலகையே  

வரைபடத்தில் 

சிக்கனமாகச்

சொல்லி 

விடுவாய்


நீயின்றி 

பாதை 

ஏது

பயணந்தான் 

ஏது


கரடுமுரடிலும்

கால்கள் 

நடந்தால்

புதுப்பிறவி

எடுப்பாய்


யாரோ 

செல்ல

யாரோ 

பயனடைய

புகழுனக்கே


(கவித்துளி வழங்கும் புகைப்படம் எடு கவிதை கொடு கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).