- ஒளவை அ.ர. தீபா ரவி
சற்று மேலே பார்க்கிறேன் பரந்து விரிந்த வானம்
வியந்து தான் போகிறேன்
பகலில் பளிச்சென்றும்
இரவில் விண்மீன் கூட்டத்தோடு செல்லுண்ட குடையாய்
மிளிரும் காட்சி..
அப்படியே கீழே சுற்றிப் பார்க்க ஓரறிவு முதல் ஏழாம் அறிவு வரை அதிசயங்கள்
பச்சைக் கம்பளம் விரித்தாற்போல புல்வெளிகள்
உயிர்க்கோளமாய்
அன்னை பூமி

நாகரிக நகரம்
வாசல் எதுவெனத் தெரியாத வண்ணம் பெட்டி பெட்டியாய்
அடுக்ககங்கள்..
சிற்றூரில் நிழற்குடையாய் மரங்கள் செடிகள் கூடவே தொங்கும் தோரணமாய்க் கொடிகள்..
காற்றோடு தலையசைத்து தாலாட்டுப் பாடிட
அமைதி வாழ்வின்
அடையாளமாய்
மனிதர்கள் மட்டும் ஏனோ
நிற்க பேச புன்முறுவல் பூக்க நேரமின்றி.
பணத்தின் பின்னால்
ஓடிக்கொண்டே இருக்கும் நிலைதான் ஏனோ..
மறு வாய்ப்பு தருவதில்லை என்பதை மறந்தனர்
என்பது தெளிவு..
(கவித்துளி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}